Bharat Electronics Limited நிறுவனம் தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், trainee engineer, project engineer உள்ளிட்ட பணிகளுக்கு 18 காலி பணியிடங்களும், visiting medical officer பணிக்கு 2 காலி பணியிடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய தேவையான தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியில் சேர ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்களின் வயதானது, 28 முதல் 32 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிடலாம். இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், BE,B,Tech போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்த படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி வாய்ந்த நபர்கள் என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு 14 -10 -2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com