மஞ்சள் பூசணி ஒரு நீர் காய்..சாம்பல் பூசணி, அரசாணிக்காய், பரங்கிக்காய், சிவப்பு பூசணி என இதற்கு பல பெயர்கள் உண்டு. இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் எண்ண முடியாத பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இந்த பூசணிக்காயில் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இதை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்?
100 கிராம் அளவு பூசணிக்காயை நன்றாக கழுவி தோலுடன் பொடி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் நோய்களே நம்மை நெருங்காது. இந்த ஜூஸை காலையில் தான் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் தான் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இந்த பூசணி சாற்றை குடிக்கலாம். இது நச்சுத்தன்மையை நீக்க உதவும். முக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி அளவு எடை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கிறது. இதனால் அதிக உணவைத் தவிர்க்க உதவுகிறது. இதனால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.
நன்றி
Publisher: 1newsnation.com