Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் டேனியல். இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மகத் உடன் இவருக்கு கைகலப்பு ஏற்பட்டது.
டேனியலை தாக்கியதற்காக மகத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல்ஹாசன். பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதன்முறையாக ரெட் கார்டு வாங்கிய போட்டியாளர் மகத் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் டேனியலுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், டேனியல், தான் ஒரு நூதன மோசடி ஒன்றி சிக்கியது குறித்து கூறி இருக்கிறார். அதன்படி நோ புரோக்கர் ஆப் மூலம் வாடகைக்கு வீடு தேடி இருக்கிறார். அப்போது எஸ்.டி.எஸ்.கே என்கிற நிறுவனம் டேனியலை தொடர்பு கொண்டு தங்களிடம் 17 லட்சம் கட்டினால் லீசுக்கு வீடு பார்த்து தருவதாக கூறியிருக்கின்றனர். இதற்கான ஆதாரங்களை காட்டியதோடு, சென்னையில் தங்கள் மூலம் லீசுக்கு இருக்கும் சிலரை தன்னிடம் அறிமுகப்படுத்தியதை நம்பி 17 லட்சம் கொடுத்திருக்கிறார் டேனியல்.
அதோடு மாதந்தோறும் தாங்களே வீட்டு வாடகை செலுத்தி விடுவோம் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதலீட்டு தொகையையும் உங்களிடம் கொடுத்து விடுவோம் எனவும் சொல்லி இருக்கிறார். இதை நம்பி போரூரில் உள்ள வீட்டிற்கு வாடகைக்கு சென்றிருக்கிறார் டேனியல். அங்கு வீட்டில் குடியேறி 3 மாதங்களுக்கு பின்னர் வீட்டின் ஓனர் வந்து வாடகை தரவில்லை எனக்கூறி என்னை வீட்டை காலி செய்ய சொன்னபோது தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பெங்களூருவை சேர்ந்த அந்நிறுவனம் இப்படி தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் டேனியல் கூறியுள்ளார்.
The post ரூ.17 லட்சம் கொடுத்து ஏமாந்த பிக்பாஸ் டேனியல்..!! வீடு வாடகைக்கு தேடும்போது உஷார்..!! இல்லைனா இதே நிலைமைதான்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com