இந்திய பிரதமர் மோடி, சமீபத்தில் 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிந்தார். அங்கு, அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருந்தார். அந்த சமயத்தில், பிரபல பத்திரிகையான ‛வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை போல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முன்வர வேண்டும். இருப்பினும் மோடி பின்பற்றும் ஜனநாயக முறையை பற்றி பேசாமல் அமைதி காக்க முடியாது. இதனால் அதுபற்றி ஜோபைடன் நிச்சயமாக பேச வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து தேசியவாதத்தின் கீழ் பாஜக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்கள் உள்பட 200 மில்லியன் சிறுபான்மை மக்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் மதவெறுப்பு சார்ந்த வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்துவது பற்றி கட்டாயம் விவாதிக்க வேண்டும். அனைத்து மட்டங்களிலும் அங்குள்ள அரசு முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு பாகுபாடு காட்டும் வகையிலான கொள்கை முடிவுகளை கையில் எடுத்துள்ளது. சில மாநிலங்களில் முஸ்லிம் மக்களின் சொத்துகளை இடித்து அகற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் இன்னும் கூட தண்டிக்கப்படாமல் உள்ளனர்” என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அதே பத்திரிகை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக கட்சியும் அதன் இந்து தேசியவாதக் கூட்டாளிகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்யான மற்றும் மதவெறியை பரப்பி, பொறாமை மற்றும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது” என்று விமர்சித்துள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com