சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு, பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “ `எதைக் கொண்டு அடிப்பது (தரக்குறைவான வார்த்தை)… உன்னையெல்லாம் நிம்மதியா வாழவே விடக் கூடாது, (தரக்குறைவான வார்த்தை)” ……. என்று சென்னை வெள்ள பாதிப்பு குறித்து அரசை விமர்சித்த ஊடகவியலாளர் ஷபீரை விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி உள்ளிட்ட தி.மு.க ஐ.டி விங் பிரிவைச் சார்ந்தவர்கள்.
அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா… அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் வாழவே விடக் கூடாது என்று சொல்வதா… மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒருமையில் விமர்சித்துள்ளது, பெண் இனத்தையே கேவலப்படுத்தும், அவமானப்படுத்தும் செயல். இந்த ‘ட்விட்டர் ஸ்பேஸ்’ தளத்தில் பேசிய அனைவரின்மீதும் தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி
Publisher: www.vikatan.com