Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மேலும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படும் எனவும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 2 இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்றுகாலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்!… தாம்பரம் – நாகர்கோவில் இடையே தீபாவளி சிறப்பு ரயில்! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com