பாகிஸ்தான் அணி மீது ஷோயப் அக்தர் கோபம் கொண்டது ஏன்? சச்சின் தந்த பதில் என்ன?

பாகிஸ்தான் அணி மீது ஷோயப் அக்தர் கோபம் கொண்டது ஏன்? சச்சின் தந்த பதில் என்ன?

உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியை காட்டமாக விமர்சித்த ஷோயப் அக்தருக்கு சச்சின் கொடுத்த பதில்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் ‘கிரிக்கெட் கடவுள்’ எனப்படும் சச்சின் டெண்டுல்கர், மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு இடையிலான போட்டி இன்னும் நடந்து வருகிறது.

கடந்த 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஷோயப் அக்தரின் பந்துவீச்சில் ‘கிளாசிக்கல் அப்பர் கட்’ மூலம் சிக்ஸர் அடித்த சச்சின் டெண்டுல்கர், தற்போது சமூக ஊடகங்கள் மூலம் அதேபோன்ற பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக தனது அணிக்கு ஷோயப் அக்தர் அறிவுரை வழங்கினார். சில ஆண்டுகளுக்கு முன் தனது பந்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு ‘பதற்றம் வேண்டாம்’ அறிவுறுத்தினார். இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, சச்சின் டெண்டுல்கர் பதிலடி கொடுத்து, ஷோயப்பின் அறிவுரை விரயம் ஆகிவிட்டது என்று கூறினார்.

சச்சின், “என் நண்பரே, உங்கள் அறிவுரையைப் பின்பற்றி எல்லாவற்றையும் குளிர்ச்சியாக வைத்திருந்தேன்!” எனக் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் கருத்து பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று தரப்பிலும் தோல்வியடைந்தது. இந்தக் கதை சமூக ஊடகங்களில் இரு முன்னாள் வீரர்களுக்கு இடையே நடந்த ‘நகைச்சுவையான சண்டை’ மட்டும் அல்ல.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் உற்சாகம் பொதுமக்களிடமிருந்து இரு நாடுகளின் உயரடுக்கு மக்கள் வரை அனைவரையும் எவ்வாறு கவ்வியது என்பதையும் இது காட்டுகிறது.

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியை ஆதரித்து மைதானம் நிரம்பியது

கடந்த சனிக்கிழமையன்று, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் நிரம்பி வழிந்தது.

இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்தியா டாஸ் வென்று பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தபோது, பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்களுக்கு ஆட்டமிழக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்திய அணிக்கு இது மிகவும் கடினமான இலக்கு அல்ல. இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 117 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது. இது இந்தியாவின் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் மீது எட்டாவது தொடர் வெற்றி.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தனது அணியின் இலக்கு பெரியது என்று கூறினார். “நாங்கள் தொடங்கிய விதம் எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் 280 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தோம்.”

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பாகிஸ்தான் அணி முயற்சி செய்யவில்லை அல்லது வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பும்ரா 7 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் முகமது ரிஸ்வான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானின் ஒவ்வொரு வீரரும் அவருக்கு எதிராகக் கவலைப்பட்டதைக் காண முடிந்தது.

ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, “நன்றாக இருக்கிறது. விக்கெட் மெதுவாகவே விழும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே பேட்டர்கள் ரன்கள் அடிக்க முடியாதபடி கடினமாக்க விரும்பினோம்,” பும்ரா கூறினார்.

ரிஸ்வானின் விக்கெட் குறித்து பும்ரா கூறியதாவது, “ரவீந்திர ஜடேஜா பந்தை ஸ்விங் செய்ததைக் கண்டேன். எனவே, ஸ்பின்னரின் ஸ்லோ பால் போல, ஸ்லோ பாலில் நம்பிக்கை வைத்தேன். இது ரன்கள் அடிப்பதைக் கடினமாக்கும் என்று நினைத்தேன், இந்த தந்திரம் வேலை செய்தது.”

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் 270 அல்லது 280 ரன்கள் அடிக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று கூறினார்.

மேலும், “எங்களிடம் ஆறு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஒரு கேப்டனாக, என் வேலை நிலைமைகளை மதிப்பீடு செய்து, எந்த பந்துவீச்சாளர் எதிரணி பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்த முடியும் என்பதைப் கணிக்க வேண்டும்.”

“எங்கள் திட்டம் உலகக் கோப்பைக்கு முன்பே தயாராகிவிட்டது. வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு வீரரும் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.”

“உலகக் கோப்பை ஒரு நீண்ட தொடர். ஒன்பது போட்டிகளுக்குப் பிறகு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.”

“உண்மையைச் சொன்னால், நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து அணிகளும் திறமையான அணிகள் மற்றும் எந்த நாளிலும் அவர்கள் வெற்றி பெறலாம் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்,” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது ஷோயப் கோபம்

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக தனது அணிக்கு ‘பதற்றம் வேண்டாம்’ என்று அறிவுறுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர், ஒரு வீடியோவை வெளியிட்டு பாகிஸ்தானின் செயல்பாட்டில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “பாகிஸ்தானின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஒரு சிறந்த தளம் கிடைத்தது. ஆனால் அணி அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாகிஸ்தானிடம் அதிக ஸ்கோர் அடிக்கும் திறமை இல்லை. மிகவும் நல்ல ட்ராக் மற்றும் பேட்டிங் விக்கெட்டில் பாகிஸ்தான் கைகளில் இருந்து ஆட்டம் நழுவுவதைக் காண இதயம் வலிக்கிறது.”

ஷோயப் அக்தர், மாறாக, இந்திய பந்துவீச்சாளர்களைப் புகழ்ந்தார், “இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ரோஹித் சர்மாவின் மீட்சி மற்றும் தலைமைத்துவம் சிறப்பாக இருந்தது.”

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், @SHOAIB100MPH

கூட்ட நெரிசலான நரேந்திர மோதி மைதானம்

இது ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம். இதில் இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டி இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது, சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தில் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன.

ஆனால் சனிக்கிழமையன்று காட்சி வேறாக இருந்தது. மைதானம் நிரம்பி வழிந்தது. சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் போட்டியைப் பார்க்க இங்கு வந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டுக்கும் இந்திய அணி அடித்த ஒவ்வொரு பந்துக்கும் மைதானம் உற்சாகமான சத்தத்தில் மூழ்கியது.

இங்குள்ள காட்சியைப் பார்க்கும்போது, ‘கிரிக்கெட் இந்தியாவின் மதம்’ என ஏன் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

சச்சினின் வருகை

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

சச்சின் டெண்டுல்கர் போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தை அடைந்ததும், பார்வையாளர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், ஐசிசி உலகக்கோப்பை 2023இன் உலக தூதராக உள்ளார். போட்டிக்கு முன்னதாக உலகக்கோப்பை போட்டிக்கான கோப்பையுடன் மைதானத்தை அடைந்திருந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியைப் பார்க்க பல பிரபலங்களும் வந்திருந்தனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவர் மைதானத்தின் பார்வையாளர் கேலரியில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

இந்திய அணியின் வெற்றி குறித்து, அமித் ஷா தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில், “இந்த அற்புதமான வெற்றிக்கு நமது கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி தனது வெற்றியைத் தக்க வைத்துள்ளது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையின் மூலம் உங்கள் நாட்டிற்கான இலக்கை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் அணி முயற்சி செய்யவில்லையா?

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பாகிஸ்தான் அணி அதிகம் முயற்சி செய்யவில்லை என்று கூறினார்.

குல்தீப் , “விக்கெட் மெதுவாகவே வீழ்ந்தது. ஆனால் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவில்லை, எனவே நான் என் வேகம் மற்றும் வேறுபாட்டில் கவனம் செலுத்தினேன்,” என்றார்.

மேலும், “நான் நன்றாகப் பந்துவீசினேன். விக்கெட்டுக்கு வெளியே அதிக பந்துகள் வீசவில்லை. அவர்கள் போதுமான அளவு முயற்சி செய்யவில்லை. ரிஸ்வான் அதிகம் ஸ்வீப் செய்யவில்லை. எனவே அவர் சில மோசமான ஷாட்களை அடிக்க வேண்டுமென விரும்பினேன்,” எனத் தெரிவித்தார்.

“கடந்த சில போட்டிகளாக, நான் சவுத் ஷகீலை கவனித்து வருகிறேன், அவர் ஸ்வீப் செய்ய மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். பந்து மெதுவாக இருக்கும் என்று நினைத்தார், ஆனால் அது சுழன்றது.

இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் முன்பாக விளையாடுவது நம்ப முடியாதது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவும், சுமார் 90,000 பேர் கூடி அதைப் பார்க்கவும், இத்தகைய சூழ்நிலை மிகவும் சிறப்பானது,” என அவர் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியாவின் ‘மந்திரம்’

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

போட்டியின் போது, இந்தியா-பாகிஸ்தான் போட்டி சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆனது. கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியின் சிறப்பு தருணங்கள் பற்றி பேசி வந்தனர்.

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இமாம்-உல்-ஹக் விக்கெட்டை வீழ்த்தியது, ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஹர்திக் பந்து வீசும் வீடியோவை பகிர்ந்துகொண்ட ரசிகர்கள், இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்த ஹர்திக் ஏதோ ‘மந்திரம்’ செய்ததாகக் கூறினர்.

ஒரு ரசிகர், “ஹர்திக் பாண்டியாவின் பந்தில் மந்திரம் உள்ளது, அடுத்த பந்தில் இமாம் உல் ஹக் அவுட்,” என்று பதிவிட்டிருந்தார்.

பிசிசியை குறிவைத்த சிவசேனா

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றபோது, X சமூக ஊடகத்தில் ‘Shame on BCCI” என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, இந்த ஹேஷ்டேகுடன் பிசிசிஐயின் மீது கேள்வி எழுப்பியுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் நுழையும் பாகிஸ்தான் வீரர்களின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “இன்று பிசிசிஐ மக்கள் நம் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு மலர்களை வீசி வரவேற்கின்றனர். தேர்தலில் அதே வீரர்களின் படங்களையும் தியாகங்களையும் பயன்படுத்திய பாஜகவினர், இப்போது பாகிஸ்தானை வரவேற்கும் படங்களுடன் இந்தியாவில் பிரசாரம் செய்வார்களா?”

“இந்த வீரர்களின் இழப்புக்கான வலியை அவர்கள் தங்கள் இதயத்தில் தாங்காததால், தேர்தலின்போது தேசபக்தி மற்றும் போர் பேச்சில் சூழ்நிலையைச் சூடேற்றும் அவர்கள், பாகிஸ்தானுக்கு முன்னால் சிவப்புக் கம்பளத்தை விரிப்பதில் எந்த வெட்கமும் படவில்லை,” என்று பதிவிட்டிருந்தது.

கோபமூட்டும் விளம்பரம்

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

பயண நிறுவனம் ‘மேக் மை ட்ரிப்’ அதன் விளம்பரங்களில் ஒன்றின் காரணமாக சமூக ஊடக பயனர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, அந்நிறுவனம் ஆங்கில நாளிதழின் ஆமதாபாத் பதிப்பில் ஒரு முழு பக்க விளம்பரத்தைக் கொடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணி தோற்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தைப் பகிர்ந்து , இது தரக்குறைவானது மற்றும் அவமானப்படுத்துவது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஜோத்ஸ்னா மோகன் என்ற பயனர், “உங்கள் இந்த விளம்பரத்தைவிட உங்கள் பயண சேவைகள் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று எழுதியுள்ளார்.

தெஹ்சீன் பூனாவாலா, “இது நல்ல விளம்பரமே அல்ல. மிகவும் தேவையற்றது, விரும்பத்தகாதது. என் கருத்துப்படி, மேக் மை ட்ரிப் இந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் முன் தோல்வியடைந்த பாகிஸ்தான், மைதானத்துக்கு உள்ளேயுயும் வெளியேயும் ஏவப்பட்ட அம்புகள்

பட மூலாதாரம், Getty Images

எவ்வாறாயினும், சில பயனர்கள் இந்த நிறுவனத்தின் விளம்பரத்தைப் பாராட்டியும் இருந்தனர். ஒருவர், “மேக் மை ட்ரிப்பின் இந்தியா-பாகிஸ்தான் விளம்பரம் சிறந்தது,” எனப் பதிவிட்டிருந்தார்.

ராகுல் பெர்னாண்டஸ் என்ற பயனர், “ஒரு இந்தியனாக, இந்த விளம்பரத்திற்காக ஒவ்வொரு பாகிஸ்தானி மக்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது இந்திய மதிப்பீடுகளை பிரதிபலிக்கவில்லை,” எனப் பதிவிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *