கோயம்புத்தூர்: வள்ளிக் கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா? பத்மஸ்ரீ விருது மூலம் வாக்குகளை கவரப் பார்க்கிறதா பாஜக?

கோயம்புத்தூர்: வள்ளிக் கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா? பத்மஸ்ரீ விருது மூலம் வாக்குகளை கவரப் பார்க்கிறதா பாஜக?

கோவை: வள்ளி கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது! இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலா?

கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளிக் கும்மி நாட்டுப்புற கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

இந்த விருதை கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து பா.ஜ.க அறிவித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொங்கு மண்டலமும் வள்ளி கும்மியும்

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தமிழ் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை குறித்தான வள்ளிக்கும்மி ஆடுவதற்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், விழாக் காலங்களில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு பல சாதியினரும் வள்ளிக் கும்மி ஆடி வந்தனர். ஆனால், தற்போது கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினரும்தான் வள்ளிக்கும்மி பயிற்சியளித்து, நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம்கூட ஈரோட்டில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, பெண்களுக்கு வள்ளிக் கும்மி பயிற்சியளித்தபோது அவர் அந்தப் பெண்களிடம், ‘‘சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே… கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டுப் பையனையே…,’’ எனக் கூறி, உறுதி மொழி ஏற்க வைத்தது பெரும் பேசுபொருளானது.

இப்படி வள்ளிக் கும்மி என்றாலே கொங்கு மண்டலமும், குறிப்பிட்ட சாதியினரும் மட்டுமே முன்னிறுத்தப்படுவதை வெளிப்படையாகவே பார்க்க முடிவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை: வள்ளி கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது! இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலா?

87 வயதான வள்ளிக் கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ

இப்படியான நிலையில், மத்திய அரசு 2024க்கான பத்மஸ்ரீ விருதை 110 பேருக்கு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான வள்ளிக் கும்மி நாட்டுப்புறக் கலைஞர் பத்திரப்பனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர், கோவை மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியில் பல ஆண்டுகளாக, வள்ளிக் கும்மி பாட்டுகளைப் பாடி, அந்த நடனத்தைப் பலருக்கும் பயிற்சியளித்து வருகிறார்.

பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.கவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பத்திரப்பன் வீட்டுக்கே சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எனப் பலரும் பத்திரப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மற்ற அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க வரும் மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டல வாக்கு வங்கியை மையப்படுத்தி வள்ளிக் கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளதாகப் பரவலாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.

கோவை: வள்ளி கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது! இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலா?

’60 ஆண்டுகளாக பயிற்சி கொடுக்கிறேன்’

விருது பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் பத்திரப்பன்.

‘‘நான் ஒரு சிறு விவசாயி. சிறு வயதில் விவசாயப் பணியை முடித்துவிட்டு கிடைக்கின்ற நேரத்தில் எங்கள் ஊரிலிருந்த மூத்த வள்ளிக்கும்மி கலைஞர்களிடம் முறையாகப் பயிற்சி பெற்றேன்.

கடந்த 60 ஆண்டுகளாக வள்ளிக்கும்மி பாடல் மற்றும் நடனத்தை, கிராமத்திலுள்ள, இளைஞர்கள், பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன். வள்ளி மற்றும் முருகன் வாழ்க்கையைப் பாடல்களாகப் பாடி கும்மி அடித்து ஆடுவதுதான் வள்ளிக் கும்மி.

மற்ற கலைகளைப் போல வள்ளிக்கும்மியில் இசைக்கருவிகள் என ஏதும் இல்லை. பாடல் பாடுவோம், ஒருசேர அனைவரும் ஆடுகிறார்களா என்பதைக் கண்டறிய கால்களில் சலங்கை அணிவோம். பாடலுக்கு ஏற்றபடி ஆடும்போது சலங்கை சப்தமே இசையாக மாறும்.

இத்தனை ஆண்டுகளாக நான் பயிற்சி கொடுத்து வரும் நிலையில் எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை பாரம்பரிய வள்ளிக் கும்மிக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் பார்க்கிறேன்,’’ என்றார் பத்திரப்பன்.

கோவை: வள்ளி கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது! இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலா?

வள்ளிக்கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா?

‘வள்ளிக்கும்மி கொங்கு வேளாள கவுண்டர்களுக்கானதா? பத்மஸ்ரீ கொடுத்தது பா.ஜ.கவின் அரசியல் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?’ என்ற கேள்வியை பத்திரப்பனிடம் முன் வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த அவர், ‘‘வள்ளிக்கும்மி அனைவருக்குமானது. இதுவரை நான் பயிற்சி கொடுத்ததில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்தான் அதிகம். கவுண்டர்களா இல்லையா என்றெல்லாம் நான் பார்ப்பது இல்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளேன், இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

மேலும், முன்பு பல சமூகத்தினரும் ஆடி வந்த வள்ளிக் கும்மியை, இன்று கொங்கு மக்கள் அதை வளர்த்து பயிற்சி கொடுத்து கலையை அழியாமல் காத்து வருவதாகக் கூறினார்.

அதேபோல், பா.ஜ.க அரசியல் காரணத்துக்காக பத்மஸ்ரீ விருது கொடுத்ததாகக் கூறுவது குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் வாதம் என்று கூறும் பத்திரப்பன், “கரூரில் ஆயிரக்கணக்கானோர் வள்ளிக் கும்மி ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.

வள்ளிக் கும்மி, தமிழகத்தில் அழிந்தது போக எஞ்சியுள்ள பாரம்பரிய கலைகளுள் ஒன்று. இந்தக் கலைக்கு அங்கீகாரம் கொடுக்க பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளனர் அவ்வளவுதான்,’’ என்றார்.

கோவை: வள்ளி கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது! இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலா?

‘இது பா.ஜ.கவின் புது தந்திரம்’

வள்ளிக் கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ வழங்கியது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ‘‘பா.ஜ.க வள்ளிக் கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ அறிவித்ததை, ஒரு உண்மையான கலைஞருக்கு விருது அறிவித்துள்ளது என்று பார்க்கலாம். அதேநேரம் அதன் பின்னணியில் அரசியலும் உள்ளது.

அதற்காக நாம் அரசியல் காரணத்தை மட்டும் கூறி உண்மையான கலைஞரைக் களங்கப்படுத்திவிடக்கூடாது. அதேவேளையில், பா.ஜ.கவின் இதுபோன்ற அறிவிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் நுண் அரசியலைப் பேசாமல் விடுவதும் தவறு,’’ என்கிறார் அவர்.

‘விருதுக்குப் பின்னால் அரசியல்’

‘‘விருது வழங்குவது, புதிய அறிவிப்புகளை வெளியிடுவது போன்றவற்றின்போது பா.ஜ.க ஒரு வாக்கு வங்கி தந்திரத்தைப் பின்பற்றுகிறது,” என்று கூறுகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

கோவை: வள்ளி கும்மி கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது! இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலா?

பட மூலாதாரம், Dallton

“எந்தக் கட்சியும் கவனிக்காத விஷயங்களைத் தேர்வு செய்து, அதில் ஒரு உண்மையான கலைஞரைத் தேர்வு செய்து விருது வழங்குவது, புதிதான அல்லது பலரால் மறக்கப்பட்ட பல ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்புகளை வெளியிடுவது போன்ற பாஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

அதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என நினைக்கின்றனர். தேவேந்திர குல வேளாளர் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அந்த வகையில் இப்போது வள்ளிக் கும்மி கலைஞருக்கு விருது வழங்கியுள்ளது. அதன் பின்னாலும் நுண்ணிய வாக்கு வங்கி அரசியல் உள்ளது,’’ என்கிறார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *