ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அரியானவை சேர்ந்த பார்வை மாற்று திறனாளி சிறுமி இந்திய அரசின் பால புரஸ்கார் விருது பெற்றார்.
10 வயது பார்வை மாற்று திறனாளி சிறுமி நூற்றுக்கணக்கான குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி?
ஹரியாணாவை சேர்ந்த 10 வயது சிறுமி தன் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறார்.
பார்வை மாற்றுத்திறனாளியான அவர் செங்கல் சூளைகளில் பணிபுரிவோர், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் பிள்ளைகள் கல்வி கற்க உதவி வருகிறார்.
அவருடைய இந்த சேவை காரணமாக அவருக்கு குடியரசு தினத்தில் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மென்பொருள் உதவியுடன் அவர் மடிக் கணினியில் டைப் செய்யவும் தனது வீட்டுப் பாடங்களை செய்யவும் பழகியுள்ளார்.
நான்காவது மாடியில் இருக்கும் தன் வகுப்பறைக்கு தானே கைத்தடி வைத்து ஏறி செல்லவும் அவரால் முடியும். அவரைப் பற்றிய விரிவான காணொளி இது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்