ஆந்திரப் பிரதேசத்தின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள கும்மலட்சுமிபுரத்தில் கர்ப்பிணி பெண்களுக்காக பிரத்யேகமாக விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
பார்வதிபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமை (ஐடிடிஏ) அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விடுதியைத் தொடங்கினார்கள்.
பார்வதிபுரத்தில் ஐ.டி.டி.ஏ., மூலம் தொடங்கி நிர்வகிக்கப்படும் இதுபோன்ற தங்கும் விடுதிகளில் பெரும்பாலான கர்ப்பிணிகள் சேரத் துவங்கியுள்ளனர். அவர்கள் பொதுவாக பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த விடுதியில் சேர்க்கப்படுகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்கான விடுதிகள் முதன்முறையாக கும்மலட்சுமிபுரம் மற்றும் சாலூரில் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோதி இந்த தங்கும் விடுதிகளை பாராட்டியுள்ளார்.
அம்மாநில ஆளுநர் மற்றும் நிதி அயோக் குழுவினரும் இந்த விடுதிகளை பார்வையிட்டுள்ளார்.
இந்த விடுதி ஆரம்பித்ததில் இருந்து 1,720 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில், 1,682 பேருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதில், 1,478 குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளனர், 204 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்போது இங்கே 27 பெண்கள் தங்கி இருக்கிறார்கள்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்