நீலகிரியில் காணாமல் போன நீர்நிலை: பார்ன் பூட் ஏரிக்கு என்ன ஆனது?
தென்இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலையில் ஆங்கிலேயர் காலத்தில் முக்கிய நீராதாரமாக விளங்கிய பார்ன் பூட் ஏரி(Burnfoot) தற்போது விவசாயபூமியாக மாறிவிட்டது.
பார்ன் பூட் ஏரியைப் போல சதுப்பு நிலத்தோடு அமைந்த பல நீராதாரங்கள் நீலகிரி மலையில் வயில்வெளியாகவும், கேளிக்கை விடுதிகளாகவும் மாறிவருவருவதாக கூறும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்,மலையின் நிலஅமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்ததுடன், காலநிலை மாற்றங்களை ஒத்த பாதிப்புகளையும் ஏற்படுத்திவருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
70 வயதை எட்டவிருக்கும் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் பூமந்த்தேவி. நீலகிரி மலையில் தூய்மையான நீரை தேக்கிவைத்திருந்த பார்ன் பூட் ஏரி என்ற ஏரியில் 80க்கும் மேற்பட்ட எருமைகளை கொண்டுவந்து மேய்ச்சலில் ஈடுபட்டது இவர் குடும்பம். ஆனால் தோடர் இனத்தின் அடையாளமான மேய்ச்சல் தொழிலில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவராக பூமந்த்தேவி மாறிவிட்டார்.
:பூமந்தேவியைப் போல, நாம் சந்தித்த பல தோடர் இன மக்களும் பார்ன் பூட் ஏரி தலையாட்டி மந் என்ற தோடர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்ததை உறுதிப்படுத்தினர். தற்போது ஏரி இருந்த இடம் பார்ன் பூட் என்றே அழைக்கப்படுகிறது. பார்ன் பூட் என்ற பெயரில் தங்கும்விடுதிகள் கூட உள்ளன. (முழு தகவல் காணொளியில்)
தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு – மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்