
பட மூலாதாரம், EPA
இந்திய அணி சொந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் எளிதில் தோல்வியடையாது.
எட்டு ஆண்டுகளாக விராட் கோலியின் தலைமையில், இந்திய மண்ணில் இந்தியா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது, ஆனால் ரோகித் சர்மாவின் தலைமையில், ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இந்திய அணி இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இப்போது ஹைதராபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்தது.
சொந்த மண்ணில் தோல்வியடையாத சாதனையை இந்திய அணி எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான பேஸ்பால் வியூகம், இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தின் காலகட்டத்தை கடந்து செல்லும் தற்போதைய அணிக்கு வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவால்கள் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.
தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி இதில் விளையாடாவிட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஷாந்த் சர்மா, விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறினர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா மற்றும் கோலி கூட டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார்கள்.
இங்கிலாந்தின் ‘பேஸ்பால்’ நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா?

பட மூலாதாரம், Reuters
இந்த வீரர்கள் இல்லாத பட்சத்தில், ஹைதராபாத் போட்டியில் நடந்த தோல்வியைப் போன்ற ஒரு தோல்விக்கு இந்திய அணி ரசிகர்கள் வேதனைப்பட மாட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தும், இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறை.
690 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை விளையாடும் பதினொன்று பேரில் இருந்து வெளியேற்றியது இங்கிலாந்து அணி.
போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதாக இங்கிலாந்து அணி அறிவித்தது. இதில், இரண்டு வீரர்கள் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைத்தான் பெற்றிருந்தார்கள்.
உண்மையில், பந்து மற்றும் மட்டைக்கு பதிலாக ஆக்ரோஷமான சிந்தனையால் இங்கிலாந்து அணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதுவே பேஸ்பால் விளையாட்டின் அடிப்படைத் தத்துவம்.
சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தோல்வியைப் பொருட்படுத்தாமல் வெற்றி பெற விளையாடுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இந்த வார்த்தைகள் காகிதத்தில் படிக்கும் போதும் காதுகளால் கேட்கும் போதும் நன்றாகத் தோன்றலாம், ஆனால், ஆடுகளத்தில் இந்த சிந்தனையை செயல்படுத்துவது மிகவும் கடினம்.

பட மூலாதாரம், Reuters
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த வகை கிரிக்கெட்டை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு, அதுவும் இவ்வளவு நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணியை அதிகம் விமர்சிக்க முடியாது.
இந்த தோல்விக்குப் பிறகு அணி நிர்வாகம் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
நான்காவது இன்னிங்ஸில் 230 ரன்களை சேஸ் செய்வது அவ்வளவு கடினம் அல்ல என்று கேப்டன் ரோகித் சர்மா உணர்ந்தார். ஆனால், அவரது பேட்ஸ்மேன்கள் தைரியத்தை வெளிப்படுத்தவில்லை.
முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் என்ற இலக்கை பேட்ஸ்மேன்கள் எட்டியிருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பினார். ஏனெனில், இந்தியாவில் கடைசி இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சவாலானது.
ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் எப்படி இருக்கு?

பட மூலாதாரம், Reuters
போட்டி முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்பாக பயிற்சியாளர் டிராவிட்டிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த வீரர்கள் ஹைதராபத்தில் நடைபெற்ற இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களிலியே அவுட் ஆகி வெளியேறினர். அதேபோல, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
இந்த இரண்டு வீர்களின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விவரங்களைப் பார்த்தால், அவர்களே அதிர்ச்சியடைவார்கள்.
விசாகப்பட்டினத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அணியில் மாற்றம் செய்து, இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை உட்கார வைத்து, ரஜத் பட்டிதாரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறைாக களமிறக்கினால், அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி சொல்லும் செய்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images
மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதன் மூலம், எப்போதும் எதிர் அணியினரை இலகுவாகப் பார்ப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்ற செய்தியை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கூறியுள்ளது.
இங்கிலாந்து தனது வலிமையான எதிரியை தோற்கடித்த விதம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதை நினைவுபடுத்தியது.
ரஹானே அணி முதலில் காபாவில் நடந்த டெஸ்டில் எளிமையாக வெற்றி பெற்றது. பின்னர் தொடரையும் வென்றது.
இங்கிலாந்து 2012ல் செய்த அதே சாதனையை மீண்டும் செய்ய முடியுமா?
இந்திய மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமா?
இது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஏனென்றால் 2017-ல் இதேபோல் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்லும் கனவு தகர்ந்துவிட்டது.
இந்த தொடரில் இந்தியாவின் சாதனையை எப்படியும் தக்க வைக்க ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு அழுத்தங்கள் இருக்கும்.
இந்தியா மீண்டும் களமிறங்கி இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற மற்ற அணிகளின் ஆசை இன்னும் சில ஆண்டுகளுக்கு நிறைவேறாது என்று அர்த்தம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்