தமிழக பெண்கள் வளர்ச்சியில் சுயஉதவிக் குழுக்களின் பங்கு என்ன? தேர்தலில் அவை முக்கியத்துவம் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றில் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கிய பங்குண்டு.
தமிழ் நாட்டில், 1990களில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழுக்களில் இன்று ஒருகோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். 7 லட்சத்து 22 ஆயிரம் குழுக்கள் செயல்படுகின்றன. சிறு சேமிப்பினை பயன்படுத்தி சிறு தொழில் முனைவோரை உருவாக்குவதில் இந்த குழுக்கள் வெற்றிபெற்றுள்ளன. கல்வி, மருத்துவ தேவைகளுக்காக ஏற்படும் எதிர்பாராத செலவுகளையும், கூட்டாக இணைந்து எதிர்கொள்ள இந்த குழுக்கள் வழிவகுத்துள்ளன.
கடந்த ஆண்டில், வெறும் 6 மாதங்களில் பத்தாயிரம் கோடி ரூபாய்களை சுய உதவிக் குழுக்களுக்கு அரசு கடன் வழங்கியுள்ளது. இந்த ஆண்டில் 30 ஆயிரம் கோடி கடன்கள் வழங்க அரசு இலக்கு வைத்திருக்கிறது. பெண்களை மையப்படுத்திய திட்டங்கள், தேர்தல் நேரத்து பலன்களையும் எதிர்பார்த்தவையாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், சுய உதவிக் குழுக்களுக்கும் அந்த முக்கியத்துவம் உள்ளது.
அப்படி சுயஉதவிக்குழு மூலம் தேர்தல் வரை சந்தித்து வெற்றிகரமாக பெண்களை முன்னேற்றி வரும் ஒரு குழுவை பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்