பாகிஸ்தான்: பெண்ணின் உடையில் இருந்தது குர்ஆன் வாசகம் என்று நினைத்து முற்றுகையிட்ட மக்கள் – காணொளி
பாகிஸ்தானில் பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி பத்திரமாக மீட்டுச் செல்லும் காட்சி இது.
பெண் ஒருவர், குர் ஆன் வசனங்கள் எழுதப்பட்ட உடையை அணிந்ததாகக் கூறி, பலர் அவர் அமர்ந்திருந்த கடையை சுற்றி வளைத்தனர்.
சம்மந்தப்பட்ட பெண்ணின் உயிர் ஆபத்தில் இருப்பதாக காவல்துறை அதிகாரி ஷெஹர்பானு நக்வி கூறுகிறார்.
“கோபத்தில் இருந்த கும்பல், சம்மந்தப்பட்ட பெண் அமர்ந்திருந்த ஷவர்மா கடைக்கு வெளியில் தீவைத்து விடுவார்களோ என அஞ்சினோம்,” என்கிறார் அவர்.
ஆனால், மத அறிஞர்கள், சம்மந்தப்பட்ட பெண்ணின் உடையில் இருந்தது குர் ஆன் வசனங்கள் இல்லை என்றும் அது சாதாரண அரபு எழுத்துதான் என்கின்றனர்.
“நாங்கள் அந்த பெண்ணிடம் பேசினோம். தவறு செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அதில் இருந்த வார்த்தைகள் குரான் வசனம் அல்ல,” என்கிறார் ஒரு மத அறிஞர்.
பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள சந்தையில் மத துவேஷத்தை தூண்டியதாகக் கூறி பலர் அந்த பெண்ணுக்கு எதிராக கோபத்தில் முழக்கமிட்டனர். அந்த உடையில் என்ன எழுதியிருக்கிறது என்பது குறித்து யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்குள்ளாகவே அவ்வளவு குழப்பம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பான இடத்திற்கு காவல்துறை அழைத்துச் சென்று அவர் மன்னிப்பு கேட்கும் காணொளியையும் வெளியிட்டது.
“நான் பஜாருக்கு அணிந்துச் சென்ற உடையில் இருந்த டிசைனை மக்கள் புனித நூலில் இருப்பதாக புரிந்து கொள்வார்கள் என நினைக்கவில்லை. எந்த தவறான நோக்கமும் அல்ல. தவறு நடந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்கிறார் அந்தப் பெண்.
பாதிக்கப்பட்டவர் அவரது குடும்பத்தினருடன் பத்திரமாக சேர்த்து வைக்கப்பட்டார்.
இதற்கு முன்பும், மத நிந்தனை தொடர்பான பிரச்னைகளால் பாகிஸ்தானில் ஏற்கனவே வன்முறையும் கும்பல் படுகொலைகளும் நடந்தேறியுள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்