மத்திய அமைப்பு தொடர்புடைய இடங்களில் மாநில அமைப்பு சோதனையிட

இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்தக்கூடும் என்பதால், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து மத்திய அமைப்பு தொடர்புடைய இடங்களில் மாநில அமைப்பு சோதனையிட முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

அங்கித் திவாரியை கைது செய்து அழைத்து செல்லும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்அங்கித் திவாரியை கைது செய்து அழைத்து செல்லும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்

அங்கித் திவாரியை கைது செய்து அழைத்து செல்லும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள், “மத்திய அமைப்பு தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்வதற்கான வழிமுறைகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கான கையேட்டில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் முறைகேடு, ஊழிலில் ஈடுபடுவதாக புகார் கிடைத்தால், ‘Trap’ செய்து அவர்களை பிடிக்கலாம். மேற்கொண்டு மாநில அமைப்பின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆதரங்களை அழிக்க மத்திய அமைப்பு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதாக தெரிந்தால், அவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனையிட்டு ஆதாரங்களை கைப்பற்றலாம்.

பிறகு மத்திய அரசின் புலனாய்வு அமைப்பிற்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றனர். தொடர்ந்து நம்மிடம் பேசிய அமலாக்கத்துறை வட்டாரங்கள், “புகாரில் சிக்கும் மத்திய அமைப்பு அதிகாரிகள் மீது மாநில அமைப்பால் நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த புகாரை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.தான் விசாரிக்க முடியும். எனவே அவர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும்” என்றனர்.

மத்திய அமைப்புக்களுக்கும் மாநில அமைப்புக்கும் இடையேயான இந்த பிரச்சனை சட்ட சிக்கலை நோக்கி நகர்வதால், அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *