நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சாதனைப் படைத்துள்ள படம் ஜெயிலர். இப்படம் இதுவரை ரூ.600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரித்த நிலையில், இதில் நடித்த பிரபலங்களுக்கு சுமார் ரூ.130 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கிறது. அதிலும் சிவராஜ் குமார், மோகன்லால் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரஜினிகாந்துக்கு ரூ.110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக ரஜினி ரூ.80 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், கலாநிதி மாறன் இப்படத்திற்கு ரூ.30 கோடி கூடுதலாக கொடுத்திருந்தார். ஆனால், ரஜினி கேட்ட சம்பளமே வேறு என கொளுத்திப் போட்டு இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதாவது, ஜெயிலர் படத்திற்காக ரஜினி ரூ.120 கோடி சம்பளம் கேட்டிருந்தாராம். முன்னதாக ரஜினியின் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினி கேட்ட சம்பளத்தை சன் பிக்சர்ஸ் கொடுக்கவில்லை.
மேலும், அந்தப் படத்தின் நஷ்டத்தை இதில் ஈடுகட்ட வேண்டும் என்பதற்காக ரஜினிக்கு 110 கோடி சம்பளம் கொடுத்ததாக பயில்வான் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆனால், இப்போது ஜெயிலர் படத்தால் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு ரஜினியின் அடுத்த படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com