இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே 2003-ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனுமீது, உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், `கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.
`நீதி என்பது நிவாரணமல்ல… இந்த அவல நிலையை முற்றிலுமாக ஒழிப்பதே!’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com