மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), ஆபிதாபேகம்(38) என்ற தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான், சாஜித்பாஷா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
அந்த வகையில், நேற்று முன்தினம் சாஜித்பாஷா, ஆபிதாபேகம் ஆகியோருக்கிடையில் தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால், ஆத்திரம் கொண்ட சஜித்பாஷா, தன்னுடைய மனைவியை அடித்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, கோபம் கொண்ட மனைவி, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து. தன்னுடைய மனைவியின் சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருகே உள்ள வில்லியம்பாக்கம் பகுதிக்கு சென்ற சாஜித்பாஷா, மது போதையில், மாமியாரிடமும், வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததால், வீட்டை விட்டு வெளியே போக சொல்லி, மாமியார் கூச்சலிட்டுள்ளார்.
இதன் காரணமாக கோபமுற்ற சாஜித் பாஷா, தன்னுடைய சட்டை பையில் வைத்திருந்த பிளேடால், தன்னுடைய கழுத்து மற்றும் உடல் போன்ற பகுதிகளில் சரமாரியாக கிழித்துக் கொண்டு, இரத்த வெள்ளத்தில், அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com