வெள்ளை அறிக்கை:
இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் என்ன என்னது என்று கேள்வியெழுப்பும் நிலை உருவானது. அதிகாரிகள் தொடங்கி சென்னை மாநகராட்சி பிரதிநிதிகள் வரை பகுதிகளுக்குச் செல்லும்போது கேள்விகேட்கத் தொடங்கிவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி தரப்பில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை பணிகளைத் தயார் செய்யத் தொடங்கியிருக்கிறோம். அந்த அறிக்கையில் இதுவரை சென்னை மாநகராட்சி பகுதிகளில் எங்கு எவ்வளவு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்திருக்கிறது.
இதுவரை அந்த பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த நிதிகளின் கீழ் அந்த வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஒரு விரிவான வெள்ளை அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இன்னும் சில தினங்களில் அறிக்கை தயாரானதும் சமர்ப்பிக்கப்படும்” என்றார் விரிவாக. பெருமழை பெய்தாலும் சென்னையில் மழைநீர் தேங்காது என்று சொல்லிவிட்டு இப்போது வெள்ளை அறிக்கை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்பே இந்த பகுதிகளில் எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது என்று தெளிவாகச் சொல்லியிருந்தால் எவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்பட்டிருக்காது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com