அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜரானார். அபிஜித் மஜூம்தார் மீது வழக்கு பதிவுசெய்தது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட அவருக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் வாதிட்டார்.
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மனுதாரரை கைதுசெய்யும் நோக்கம் தற்போது இல்லை எனவும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, நவம்பர் 8-ம் தேதி சென்னை சைபர் க்ரைம் போலீஸார் முன்பு ஆஜராகும்படி அபிஜித் மஜூம்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com