ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது பொருத்தமற்றது… இது தினகரனின் நன்மதிப்பைக் கெடுப்பதற்காக (defaming) செய்கிறார்கள் என்கிறீர்களே… அப்படி என்றால் இது நாள் வரை அபராதத்தைக் கட்டுவதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்… இது என்ன மாதிரியான வாதம்… அமலாக்கத்துறை விதித்திருக்கும் அபராதத்தைச் செலுத்தியிருந்தால் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்காது.


முன்னாள் எம்.பி என்பதற்காக அபராதத்தைச் செலுத்த முடியாது எனக் கூற முடியுமா… சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். நாட்டின் குடியரசுத் தலைவர் அபராதம் செலுத்தவில்லையென்றால்கூட அவர்மீது வழக்கு தொடர சட்டத்தில் இடம் உள்ளது. `நான் குடியரசுத் தலைவர். என்னை விசாரிக்கக் கூடாது” என்றெல்லாம் அவர் சொல்ல முடியும் என நினைக்கிறீர்களா?” என்றார்.
மேலும், “100 சதுர அடி நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துவிட்டால், அரசு அதிகாரிகள் புடைசூழ, புல்டோசருடன் ஆக்கிரமிப்பை அகற்றச் செல்கின்றனர். ஆனால், இத்தனை ஆண்டுகளாக 28 கோடி ரூபாய் அபராதத்தைச் செலுத்தாமல் இருக்கிறார்.


அதை வசூலிக்க அமலாக்கத்துறை தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது… `அய்யய்யோ… நீதிமன்றத்தில் கைகட்டி நிற்க வேண்டுமே’ என்று நினைக்கும் சாமானியர்களுக்குத்தான் நீங்கள் சொல்லும் சட்டமெல்லாம், டி.டி.வி.தினகரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு கிடையாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், வழக்கை நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்” எனவும் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளிவைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com