Chennai Port Trust – சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள 09 கண்காணிப்பு பொறியாளர் (Superintending Engineer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துருக்கு. கல்வித்தகுதியாக BE/B.Tech படித்திருக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலேயே வேலை பார்க்கலாம். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.
ALSO READ : தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை வெளியீடு! என்னாது மாதம் ரூ.2,08,700/- சம்பளமா?
பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை 08 டிசம்பர் 2023 முதல் 22 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். அதிகபட்சம் வயது வரம்பு 40 வரை இருக்க வேண்டும். முதலில் எழுத்துத் தேர்வும் பிறகு நேர்காணல் முறையிலும் விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுப்பார்கள். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Secretary,
Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai-600001.
மேலும் இப்பணியை பற்றிய விவரங்களுக்கு Official Notification-யை ஓபன் செய்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான படிவங்களை Application Form லிங்கை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in