அதன்படி, “கேன்டீன்களை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும். பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்டவை எளிதில் உணவகங்களுக்குள் வராத அளவுக்கு, முறையாகப் பராமரிக்க வேண்டும். கேன்டீனுக்கு அருகில் இருக்கக்கூடிய சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக மூட வேண்டும். செல்லப்பிராணிகளோ, விலங்குகளோ, பறவைகளோ கேன்டீன்களுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. மேலும், உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் நல்ல தரத்துடன் இருக்கிறதா, காலாவதி ஆகியுள்ளதா என்பதை அடிக்கடி சோதனை செய்யவேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கேன்டீன் நிர்வாகத்தினரும் முறையாகப் பின்பற்ற வேண்டும்” என பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.


மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் இயங்கி வரும் கேன்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்துப் பேசியிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கேன்டீன் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட கேன்டீனை மூடி சீல் வைத்திருக்கிறோம். அதேபோல மருத்துவமனைகளை ஆய்வு செய்யும்போது அறைகள், படுக்கைகள், கேன்டீன்கள் மட்டுமல்லாது அங்குள்ள கழிவறைகளையும் ஆய்வு செய்யப்போகிறோம். எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ அங்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுத்து பராமரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அரசு மருத்துவமனை என்றாலே அங்கு சுத்தம் இருக்காது என்ற மாயத்தோற்றத்தை யாரும் உருவாக்கிவிடக்கூடாது!” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏதாவது சம்பவம் நடக்கும் போதும், அது வெளியுலகுக்கு தெரியும் போது மட்டும் ஆய்வு, நடவடிக்கை என்று எடுக்காமல், இது போன்ற விவகாரங்களில் தொடர் ஆய்வுகளும், சமசரமற்ற நடவடிக்கைகளும் அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com