மாற்றுத்திறனாளிகள் நல பெண் ஆர்வலர் தன் திருமண பதிவின்போது சந்தித்த சிக்கல்
மாற்றுத்திறனாளியான விராலி மோடிக்கு அக்டோபர் 16ம் தேதி திருமணம் நடந்தது. அன்று தனது துணைவர் க்ஷிதிஜ் நாயக்குடன் மும்பையில் உள்ள திருமணப் பதிவாளர் அலுவலகத்தை சக்கர நாற்காலியில் சென்றடைந்த அவர் ஏமாற்றத்தை மட்டுமே எதிர்கொண்டார்.
விராலி மோடி தனது 15வது வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்து தனது தாயுடன் திரும்பி வந்தார். 2019 இல் அவரது தாயார் இறந்துவிட்டார். விராலி இன்றும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறைவு என்றும், அரசு விதிமுறைகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். முன் ஒரு மறை, மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பான ரயில் பயணத்தை பரிந்துரைத்து அவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்