
பட மூலாதாரம், Getty Images
பராக் தேசாய், நான்காம் தலைமுறை தொழிலதிபர்.
“இந்தியாவில் எல்லோரும் தேநீர் இல்லாமல் வாழலாம். ஆனால் தேநீர் இல்லாமல் வாழ முடியாது.” இந்தியாவின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் ஒன்றான வாக்பகாரி டீ குழுமத்தின் இயக்குநர் பராக் தேசாய் கூறிய வார்த்தைகள் இவை.
வாக்பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பராக் தேசாய் தனது 49ஆவது வயதில் காலமானார். சமூக ஊடகங்களில் இரங்கல் செய்தியுடன் அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவலை அந்நிறுவனம் அறிவித்தது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, தேசாய் கடந்த வாரம் அக்டோபர் 15 அன்று தனது வீட்டிற்கு வெளியே தெருநாய் கடிக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்து காயமடைந்தார். இதில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
வாக்பக்ரி, குஜராத்தில் நன்கு அறியப்பட்ட தேயிலை நிறுவனம். இது தேசாய் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பராக் தேசாய், நான்காம் தலைமுறை தொழிலதிபர். அந்நிறுவனத்தின் இணையதளத்தின்படி, அவர் அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார்.
பராக் தேசாய் 1995 இல் குடும்ப வணிகத்தில் சேர்ந்தார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாய் 100 கோடிக்கும் குறைவாகவே இருந்தது.
அவர் ஆமதாபாத்திற்கு வெளியே தங்களது குடும்ப வணிகத்தை விரிவுபடுத்தினார். இணையவழி விற்பனையையும் தொடங்கினார். தேசாய், அவர் நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

பட மூலாதாரம், WAGHBAKRITEA
எப்படி இறந்தார் பராக் தேசாய்?
அக்டோபர் 15 ஆம் தேதி பராக் தேசாய் தனது வீட்டின் வெளியே சரிந்து விழுந்தார். தெருநாய்கள் அவரை துரத்தியதில் இருந்து அவர் தப்பி ஓடும்போது அவர் கீழே விழுந்திருக்கிறார். இதனால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
வெளியே இருந்த பாதுகாவலர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அருகில் உள்ள ஷெல்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர் அறுவை சிகிச்சைக்காக சைடஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
7 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், அக்டோபர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
வியாபாரத்தில் வெற்றி கண்ட பராக் தேசாய்

பட மூலாதாரம், WAGHBAKRI/FB
பராக் தேசாய் இந்திய தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட மன்றங்களுடன் தொடர்புடையவர்.
தனது குழுமத்தின் மாற்றத்தில் பராக் தேசாய் முக்கிய பங்கு வகித்தார். அவர் 70 க்கும் மேற்பட்ட தேநீர் கடைகளையும், டீ வேர்ல்ட் கஃபேவையும் திறந்தார். அவர் குழுமத்தின் இ-காமர்ஸை உயர்த்தி சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தினார்.
அவர் இந்திய தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட மன்றங்களுடன் தொடர்புடையவர்.
போர்ப்ஸ் இந்தியாவின் கூற்றுப்படி, டாடா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மூன்றாவது பெரிய பேக்கேஜ் செய்யப்பட்ட தேயிலை நிறுவனமாக வாக்பக்ரி உள்ளது.
காந்திஜியைத் பின்பற்றிய பராக் தேசாயின் தாத்தா ஆப்பிரிக்காவில் தேயிலைத் தோட்டத்தை விட்டு ஆமதாபாத் வந்தார். பின்னர் ஆமதாபாத்தில் உள்ள கோட் பகுதியில் டீக்கடை ஒன்றை திறந்தார்.
மேற்கு இந்திய டீ டீலர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அசோக் ரெலியா, பிபிசி உடனான உரையாடலில், 80கள் வரை ஆமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமே இருந்த வாக்பக்ரி தேநீர் எப்படி சர்வதேச மட்டத்தை எட்டியது என்பதை கூறினார்.
“பராக் தேசாய் முதன்முதலில் 1990 களில் இணையதளங்களின் மூலம் தேயிலையை சந்தைப்படுத்தத் தொடங்கினார். பின், 1992 இல் வாக்பக்ரி தேயிலையை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“இதற்குப் பிறகு, நாடு முழுவதும் காபி ஹவுஸ் சங்கிலிகள் தொடங்கப்பட்டன, தேயிலைக்கு ஆடம்பரமான அந்தஸ்து இல்லை. இது தேநீருக்கு முக்கியமான நேரம்.
டீ என்றால் லாரியில் குடிப்பது என்று நம்பப்பட்டது. காபி குடிப்பது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், பராக் தேசாய் தனது தந்தையின் தொழிலில் புதுமையைக் கொண்டுவர முடிவு செய்து, அதை ஆராய்ச்சி செய்து டீ கடைகளைத் தொடங்கினார்.” என்றார் அசோக் ரெலியா.
“காபி ஹவுஸ் போன்ற விருந்தோம்பல் தவிர, இளைஞர்களுக்கான தேநீர் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டன. அவர் முதலில் ஜெய்ப்பூரில் இந்த டீ கடைகளை தொடங்கினார். பிறகு மும்பையில் தொடங்கினார். டைகர் கோட்(Tiger Goat) டீ கடைகள் ஜெய்ப்பூரில் வெற்றிபெறவில்லை, ஆனால், அது மும்பையில் வெற்றி பெற்றது.”
அதன்பிறகு ஐஸ் டீ, க்ரீன் டீ, வெண்ணிலா டீ, சாக்லேட் டீ என பல்வேறு சுவைகளில் தொடங்கிய வாக்பகாரி, வெற்றியடைந்து நாட்டின் 17 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நாடுகளில் டீ கடைகளைத் திறந்து 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்த நிறுவனம், 2000 கோடி வர்த்தகம் செய்யத் தொடங்கியது.”
தேசாய் குடும்பத்திற்கு இந்தியா மீதான அன்பு

பட மூலாதாரம், WAGHBAKRITEA
தந்தையின் தொழிலில் ஈடுபட்ட பராக் தேசாய், 1990களில் தேயிலையை இணையதளம் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினார்
பராக் தேசாய்யின் நண்பரும், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவருமான ராஜேஷ் பட் பிபிசியிடம் பேசுகையில், “பராக் தேசாய் அமெரிக்காவில் மார்க்கெட்டிங்கில் எம்பிஏ படிப்பை முடித்த பிறகு, அவருடன் படித்த நண்பர்கள் வெளிநாட்டில் குடியேறினர், ஆனால் பராக் தேசாய் மீண்டும் இந்தியா வந்தார். அவர் தனது தந்தையின் தொழிலில் சேர்ந்தார்.
“எனவே, அவர்கள் நிறுவனத்தின் தேநீர் உண்மையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரால் உட்கொள்ளப்படுகிறது. சந்தைப்படுத்தல் நிபுணரான பராக் தேசாய் தனது தந்தையிடமிருந்து வர்த்தகத்தின் சில உத்திகளை கற்றுக்கொண்டார். அவர் சில்லறை விற்பனையில் தேநீர் விற்பதற்கு முன்பு ஆமதாபாத்தின் கோட் பகுதியில் ஒரு கடை வைத்திருந்தார்.”
“ஆனால் 1980 களில், ஆமதாபாத்தில் மத வன்முறை அதிகமாக இருந்தபோது, அவரது தந்தை தேநீரை பாக்கெட்டுகளில் விற்கத் தொடங்கினார். அது வெற்றிகரமாக இருந்தது.”
“அப்போது டீயும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தந்தையின் தொழிலில் ஈடுபட்ட பராக் தேசாய், 1990களில் தேயிலையை இணையதளம் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினார்.”
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்?

பட மூலாதாரம், WAGHBAKRI/FB
2017 ஆம் ஆண்டில், வாக்பகாரிக்கு குடும்ப வணிக விருது வழங்கப்பட்டது.
ஆமதாபாத்தில் உள்ள தால்தேஜ் பகுதியில் அவரது இறுதிச்சடங்களில் கூடியிருந்த தொழிலதிபர்களில் ஒருவரான தொழிலதிபர் கேதன் படேல் பிபிசியிடம் பேசினார்.
“அவர் தனது காலை நடைப்பயணத்திற்கு வெளியே சென்றபோது தெருநாய்கள் அவரைப் துரத்தியபோது விழுந்ததால் தலையில் காயம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதுதான் அவர் மரணத்திற்கு காரணம்,”என்றார்.
பராக் தேசாயின் நண்பரான போபாலில் வசிக்கும் மனோஜ் ஷா கூறுகையில், “அன்று காலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென இரண்டு நாய்கள் சண்டையிடுவதைக் கண்டு, ஓடி வந்து விழுந்து தலையில் அடிபட்டு, ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளைச்சாவு அடைந்தார்,” என்றார்.
பராக் தேசாயின், வாக்பகாரி குழுமத்தின் எம்.டியான ராஷேஷ் தேசாய் என்பவரின் மகன். பராக்கிற்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர்.
பராக் தேசாயின் நண்பரும் ஒரு வாரத்திற்கு முன்பு அவருடன் இரவு உணவு அருந்தியவருமான ஜாடஸ் மருத்துவமனையின் துணைத் தலைவருமான ஷா பிபிசியிடம் பேசுகையில், “மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.அவருக்கு உடனடியாக அனைத்து தீவிர சிகிச்சை சிகிச்சையும் அளிக்கப்பட்டது, ஆனால் பராக் தேசாய் ஞாயிற்றுக்கிழமை இரவு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்,” என்றார் ஷா.
இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கிய ரந்தாஸ் தேசாய்
வாத் பக்ரி குழுவை நிறுவிய காந்தியவாதியான நாரந்தாஸ் தேசாய் 1892 இல் தேயிலை வர்த்தகத்தில் இறங்கினார்.
நரந்தாஸ் தேசாய் ஒரு தொழில்முனைவோராக இருந்தார். இவர் முதலில் தென்னாப்பிரிக்காவில் தேயிலை தோட்டத்தை தொடங்கினார். தேயிலை தோட்டத்தை பராமரிப்பது முதல் பதப்படுத்துதல் மற்றும் தேயிலை தயாரிப்பது வரை தனியே அவர் முழு மனதுடன் பணியாற்றினார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இன பாகுபாடு காரணமாக, அவர் இந்தியா திரும்ப முடிவு செய்தார்.
தென்னாப்பிரிக்காவில் அனுபவம் வாய்ந்த தேயிலை தோட்ட உரிமையாளர் என்ற சான்றிதழுடன் அவர் இந்தியா வந்தார்.
இந்தியா வந்தபோது அவரைக் காந்தி கௌரவித்தார். காந்திஜியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தேசாய் நிறுவனம் மூலம் சமூக சமத்துவ செய்தியை பரப்ப முடிவு செய்தார். மேல் மற்றும் கீழ் வகுப்பு சமத்துவத்தை குறிக்கும் வகையில் ஒரே கோப்பையில் ஒரு புலி மற்றும் ஆடு தேநீர் குடிப்பதைக் காட்டியது.
நாரந்தாஸ் தேசாய்க்கு மூன்று மகன்கள். ராம்தாஸ் தேசாய், ஓச்சவ்லால் தேசாய் மற்றும் காந்திலால் தேசாய் ஆகியோர் தங்கள் தந்தையின் தொழிலில் சேர முடிவு செய்தனர்.
1980கள் வரை, தேசாய் குடும்பம் குஜராத் தேயிலை கிடங்கு மூலம் தேயிலை மொத்த விற்பனையைத் தொடர்ந்தது. அத்துடன் ஏழு சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தி வந்தது.
நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, தேசாய் குடும்ப நிறுவனம் 1980 இல் தேயிலை பேக்கேஜிங்கின் அவசியத்தை முதலில் அங்கீகரித்து குஜராத் தேயிலை செயலிகள் மற்றும் பேக்கேஜர்களை நிறுவியது.
தேயிலை ஏல மையங்களில் கொள்முதலைக் கண்காணிக்க கொல்கத்தாவில் அந்நிறுவனத்தின் அலுவலகத்தைத் திறந்தது.
தென்னாப்பிரிக்காவில் வேரூன்றிய தேயிலை வணிகம் இன்று இந்தியாவின் முன்னணி பேக்கேஜ் செய்யப்பட்ட தேயிலை நிறுவனங்களில் ஒன்றாகவும், இரண்டாயிரம் கோடிக்கும் அதிகமான விற்றுமுதல் கொண்டதாகவும் உள்ளது.
வாக்பகாரி நிறுவனம் ஐந்து கோடி கிலோ தேயிலை விநியோகம் செய்துள்ளது. தற்போது 24 மாநிலங்களில் வர்த்தகம் செய்து 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்கிறது.
2017 ஆம் ஆண்டில், வாக்பகாரிக்கு குடும்ப வணிக விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
நாய் வம்பு செய்யும் போது அடிப்பது அல்லது உதைப்பது அதை கோபமடையச் செய்யும்.
நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?
தெருநாய்களின் தொல்லைக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது எப்படி என மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் தெரு நாய்களுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலியாகி வருகின்றனர்.
ஆனால் இந்த முறை பிரபல தொழிலதிபர் ஒருவர் பலியாகி உயிரை இழந்துள்ளார்.
சூரத், அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் தெருநாய்கள் சித்திரவதை செய்வதாக புகார்கள் அடிக்கடி வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் தீவிரமான சம்பவங்களும் காணப்படுகின்றன.
ஒரு நாய் உங்களைக் கடிக்க வந்தால், உங்களிடம் உள்ளதைக் கொண்டு உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
நாய் உங்கள் அந்தரங்க உறுப்புகளுக்கு அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாய்கள், மனிதர்கள் கத்துவதை விரும்புவதில்லை. நீங்கள் பயப்படவில்லை என்று பாசாங்கு செய்யுங்கள். அசையாமல் நில்லுங்கள். எதிர்க்காதீர்கள், ஏனென்றால் நீங்கள் பயந்தால் உங்கள் உடலின் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இருக்காது.
நாய் வம்பு செய்யும் போது அடிப்பது அல்லது உதைப்பது அதை கோபமடையச் செய்யும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்