சென்னை துறைமுக அறக்கட்டளையில் (சென்னை போர்ட் டிரஸ்ட்) வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. துணை தலைமை பொறியாளர் பதவியை நிரப்ப முடிவு செய்துள்ளது. அதில் 5 பணியிடம் மட்டும் காலியாக உள்ளதால் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனே ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். சென்னை போர்ட் டிரஸ்ட் வேலை வாய்ப்பு அறிவிப்பினை chennaiport.gov.in இல் வெளியிட்டுள்ளது.
ALSO READ : இந்தியன் பேங்கில் வேலை இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை போர்ட் டிரஸ்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் degree முடித்திருந்தாலே இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம். இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் வேலைக்கு சேரலாம்.
Deputy Chief Engineer வேலைக்கு ஆர்வம் இருக்கா மார்ச் 28, 2024 முடிவதற்குள் ஆப்லைனில் அப்ளை பண்ணிடுங்க. சென்னை துறைமுக அறக்கட்டளையின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 42 ஆக மட்டும் தான் இருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
துணை தலைமை பொறியாளர் வேலைக்கான மாத சம்பளமாக ரூ. 80,000 முதல் ரூ.2,20,000 வரை வழங்கப்படும் என சென்னை போர்ட் டிரஸ்ட் தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து கீழ் கண்ட முகவரிக்கு கால அவகாசம் மார்ச் 28, 2024 முடிவதற்குள் அனுப்பவும்.
அஞ்சல் முகவரி :
Secretary,
Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai-600001.
மேலும் இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பினாலும், தகவல்களை பெற வேண்டும் என்றாலும் Official Notification & Application Form க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in