இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இதில் ராமசாமி தரப்புக்குத்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு கொடுத்து வருகிறார். முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்கும் வரை சிதம்பரம் அணியிலிருந்த அழகிரி, பின்னர் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் காய் நகர்த்தி வருவதுதான் காரணம்.
இவ்வாறு இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் இருந்து வரும் சூழலில், சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்த சத்தியமூர்த்தியை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளர் சஞ்சய் காந்தியை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்தது சிதம்பரம் தரப்பு. கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளர்தான் சத்தியமூர்த்தி. மேலும் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், சோனியா தமிழகம் வந்தபோது நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், “அழகிரியை உடனடியாக மாற்ற வேண்டும்’ என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com