இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், “உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை மாதாந்திர கூட்டத்தில் தலைவர் பங்கேற்க முடியாத சூழலில் துணை தலைவர் நடத்தலாம். ஆனால், துணை தலைவருக்கு என்று நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து தான் நடத்த வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால், துணை தலைவர் வாசிம் ராஜா, ஆளுங்கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கிறார். தந்தை மாவட்ட செயலாளராக இருக்கிறார். இதை சாதமாக எடுத்துக் கொண்டு தலைவர் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இதைத் தடுக்க வேண்டிய நகராட்சி கமிஷனர் வேடிக்கை பார்த்திருக்கிறார்” என்றனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து குன்னூர் நகராட்சி கமிஷனர் ஃபர்ஜானாவை தொடர்பு கொண்டோம் , “துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் செல்வதால் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என ஷீலா கேத்ரின் கடிதம் கொடுத்துள்ளார். இதனால், துணை தலைவர் தலைமையில் கூட்டம் நடந்தது. தலைவர் நாற்காலியில் அவர் உட்கார்ந்து நடத்தியது விதிக்கு புறம்பானாதா என்பது குறித்து விதிமுறையைச் சரிபார்த்து சொல்கிறேன்” என இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com