அதோடு ஆகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவமதன், அபிராமி, செல்வம் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி மகாராஜன் “பண மோசடியில் ஈடுபட்டும், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவர்களை தாக்கிய குற்றத்திற்காகவும் பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் சிவமதன், அவர் மனைவி அபிராமி, மாமனார் செல்வம் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனையும், மூவரும் ரூ. 2,50,000 நஷ்டயீடும் வழங்க வேண்டும்” எனவும் தீர்ப்பளித்தார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பா.ஜ.க நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com