வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் அமுதா ஐ.ஏ.எஸ் நடத்திய விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட அருண்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ”வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது. சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் சி.சி.டி.வி காட்சி ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்தது. இதன் குற்றபத்திரிகையும், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும்” என சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி சங்கர் பதிலளித்தார்.
இந்த நிலையில், வேதநாரயணன், சூர்யா, வெங்கடேசன், மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி, உதவி ஆய்வாளர் முருகேஷ், இசக்கிராஜா, கார்த்திக், சதாம் உசேன், ராஜ்குமார், ஆபிரகாம் ஜோசப், ராமலிங்கம், சுடலை, விக்னேஷ், முத்து செல்வகுமார், சந்தனகுமார், மணிகண்டன் மற்றும் விவேக் ஆண்ட்ரூஸ் ஆகிய காவல்துறை அலுவலர்கள் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் நெல்லை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
நன்றி
Publisher: www.vikatan.com