ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை அரசு வெளியிட மறுப்பது ஏன்?

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை அரசு வெளியிட மறுப்பது ஏன்?

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனினால் ஜனாதிபதி செயலகத்திடம் தகவலறியும் சட்டத்தின் ஊடாக கோரிய போதே ஜனாதிபதி செயலகம் இந்த மறுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள்

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்து, தற்போது நாடு வழமைக்கு திரும்பி வரும் சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது பிரதிநிதிகள் குழுக்களுடன் பல்வேறு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், கியூபா, அமெரிக்கா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு, தனது பதவியேற்பின் பின்னரான காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட விஜயங்கள் அன்றி, அதிகாரபூர்வ விஜயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட போதிலும், அந்த விஜயங்களில் அதிகளவிலான பிரதிநிதிகள் குழாம் பங்கேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

‘ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்கள் குறித்த தகவலை வழங்க முடியாது’

இவ்வாறான நிலையிலேயே, தகவலறியும் சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் கே.திலிப் அமுதன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஒவ்வொரு நாட்டிற்குமான விஜயங்கள் தொடர்பிலான தகவல்களை, ஊடகவியலாளர் தனித்தனியாக கோரியுள்ளார்.

இவ்வாறு ஊடகவியலாளரின் கோரிக்கைக்கு, தனித்தனியாகவே ஜனாதிபதி செயலகம் மறுப்பு தகவலை அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதியின் லண்டன் விஜயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தமிழாக்கம் பின்வருமாறு.

“2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவலறியும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் 31 (3) சரத்தின் கீழ் பெயரிடப்பட்ட அதிகாரியின் தீர்மானம். உங்களினால் பெயரிடப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2023.05.29 திகதியின் மேன்முறையீடு.

02.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பில் நீங்கள் கோரியுள்ள தகவல்கள், பாதுகாப்பு உணர்வுப்பூர்வமான தகவல்களுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், 2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 5 (1) (ஆ) (i) சரத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அந்த தகவல்கள் வழங்கப்படுவதை தவிர்த்துக்கொள்வதாக பெயரிடப்பட்ட அதிகாரி தீர்மானித்துள்ளதாக உங்களுக்கு அறிய தருகின்றோம்.”

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேற்சொன்ன தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளரும், தகவல் வழங்கும் அதிகாரியுமான எஸ்.கே.ஹேனாதீரவினால் இந்த பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அனைத்து விஜயங்களுக்குமான தகவல்கள் வழங்க மறுப்பதற்கான ஒரே பதிலாக மேலே குறிப்பிடப்பட்ட பதில் வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
படக்குறிப்பு,

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண விவரங்கள் ‘பாதுகாப்பு உணர்வுபூர்வமானவை’ என கூறி தகவல்களை தர மறுத்துள்ளது ஜனாதிபதி செயலகம்.

சர்ச்சையாகும் வெளிநாட்டு விஜயங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் வசதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகைத் தந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், அரச உயர்மட்ட தரப்பினரின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்வாறு வெளிநாட்டு விஜயங்களில் பெருமளவிலான பிரதிநிதிகள் பங்கேற்பது குறித்தும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கவலை வெளியிட்டிருந்ததாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அத்துடன், ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் உள்நாட்டு அரசியல் மேடைகளிலும் அண்மை காலமாக அதிக பேச்சுக்கள் வெளியிடப்பட்டு வந்திருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பிலான தகவல்களை கே.திலிப் அமுதன் கோரியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை கோரிய போதிலும், ஜனாதிபதி செயலகம் இதே பதிலை அப்போது வழங்கியிருந்ததாக ஊடகவியலாளர் கே.திலிப் அமுதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் தான் மேன்முறையீடு செய்தததை அடுத்து, அந்த தகவல்கள் தனக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் உள்நாட்டு அரசியல் மேடைகளிலும் அண்மை காலமாக அதிக பேச்சுக்கள் வெளியிடப்பட்டு வந்திருந்தன.

இத்தாலி பயணத்துக்கு ரூ.26 மில்லியன் செலவு

இதன்படி, 2021ம் ஆண்டு அப்போதைய பிரதமராக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ, இத்தாலிக்கான விஜயத்தை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்திற்காக சுமார் 26.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது.

ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனின் கோரிக்கைக்கு அமையவே, இந்த விடயத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தனது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, மகன் யோசித்த ராஜபக்ஸ, செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்க மறுத்தமை குறித்து, ஊடகவியலாளர் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து ஊடகவியலாளர் கே.திலிப் அமுதன் பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலி விஜயத்துக்கு ரூ.26 மில்லியன் செலவு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்தது.

”இந்த விடயத்தை ஜனாபதிபதி செயலகத்துக்கு சுட்டிக்காட்டியபோதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான செலவு விபரங்கள் 6 தடவைகள் வெளிப்படுத்தப்படாமல் மறுக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவலறியும் உரிமை ஆணைக்குழுவில் கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதியின் பிரிட்டன் பயணம் தொடர்பான செலவு விவரம் வழங்கப்படாமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் முன்னிலையாக அதிகாரிக்கு, கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு விவரங்கள் வழங்கப்பட்டமையை ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.” என்று அவர் கூறினார்.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவில் ஐ.நா. சபை அமர்வில் கலந்து கொள்ளச் சென்றபோது அமைச்சர்கள் பலரையும், ஆளும் கட்சி மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்றிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஜனாதிபதி இவ்வாறு பெருந்தொகை மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளார். இது தொடர்பான விவரங்களையும் வெளியிடாமல் ஜனாதிபதி செயலகம் இருட்டடிப்புச் செய்து வருகின்றது” என்றும் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதன் தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவது தொடர்பில் ஆராய்வதாக, ஜனாதிபதி செயலகம், தகவலறியும் உரிமை ஆணைக்குழு முன்னிலையில் உறுதியளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *