கடந்த மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு, விண்கலத்தில் இருந்த லேண்டர் 40 நாள் பயணத்தை முடித்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதன்படி, அதிலிருந்து ரோவர் வெளியேறி நிலவின் மேற்பரப்பில் ‘ சிவசக்தி’ பகுதியில் இருந்து ஊர்ந்து சென்று பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அதில் இருந்து பெறப்படும் தரவுகளையும் பெற்று வருகின்றனர். குறிப்பாக நிலவின் வெப்பநிலை தென் துருவத்தில் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது.
இந்நிலையில், ரோவர் தனக்கு முன்னாள் உள்ள பெரிய பள்ளத்தை உணர்ந்து வேறு பாதையில் திரும்பியது. இந்த ரோவர் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும். இதன்படி 3 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளதத்தை உணர்ந்து மேடான பகுதியை கடக்ககூடிய வகையில் ரோவரில் தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
Also Read : மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
இந்த சந்திரயான் பிரக்யான் ரோவர் 4 மீட்டர் பள்ளம் இருப்பதை அறிந்து தற்போது புதிய பாதையின் வழியாக பாதுகாப்பாக பயணித்து வருகிறது. லேண்டரில் இருந்து 8-10 மீட்டர் தொலைவில் ரோவர் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார். மேலும், இந்த பிரக்யான் ரோவர் 500 மீட்டர் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
நன்றி
Publisher: jobstamil.in