பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?

பிக்பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், X/VIJAY TELEVISION

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவங்கள் யார்… யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கூல் சுரேஷ்

கண்டெண்ட் குடோன் என்று அழைக்கப்படும் கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த சீசனில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர் இவர்தான்.

கூல் சுரேஷ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால், அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், X/VIJAY TV

பூர்ணிமா ரவி

பிரபலமான யூடியூப்பரான பூர்ணிமா ரவியும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக களம் கண்டுள்ளார். அவருக்கு கமல்ஹாசன் விசிலை பரிசாக கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

ரவீணா தாஹா

சன் டிவியில் தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா தாஹா. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் டிவியில் பூவே பூச்சூடவா தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை முதல் ராட்சசன், எனிமி படம் வரை இவர் செய்த குட்டிக்குட்டி கேரக்டர்கள் குறிப்பிட்ட பெயரை பெற்றுத்தந்தன. அதன்பிறகு விஜய் டீவியில் வெற்றிகரமான சீரியலான மௌன ராகம் 2 தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு பட்டர்பிளை ரிங் ஒன்றை கமல் பரிசாக கொடுத்து அனுப்பினார்.

பிரதீப் ஆண்டனி

அருவி திரைப்படத்தின் துணை இயக்குநர் என்ற அறிமுகத்தோடு, அருவி பட இயக்குநரின் இரண்டாவது படமான வாழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரதீப் ஆண்டனி. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான கவினின் நெருங்கிய தோழனும் ஆவார். பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக்கை பரிசாக கொடுத்தார் கமல்ஹாசன்.

வினுஷா தேவி

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான வினுஷா தேவி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார். அவருக்கு கருப்பு வைரத்தை கமல் பரிசாக கொடுத்தார்.

வினுஷா தேவி மேடையில் கமல்ஹாசன் முன்பு தன்னுடைய நிறத்தை குறித்து தான் பட்ட அவமானங்கள் குறித்தும், தற்போது தான் தன்னுடைய நிறத்தினாலே தனக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பது குறித்தும் பேசினார். தன்னை போலவே பலர் நிறத்தை குறித்து வருத்தப்படுவதை இனி தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பிக்பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், X/BIG BOSS TAMIL 7

மணிச்சந்திரா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர் மணிச்சந்திரா. தற்போது பல தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் மணிச்சந்திரா, பிக்பாஸ் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளார். அவருக்கு குருநாதா எனும் வாசகம் அடங்கிய டீசர்ட்டை கமல் பரிசாக கொடுத்தார்.

அக்ஷயா உதயகுமார்

லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்து பிரபலமான அக்‌ஷயா உதயகுமார்

ஜோவிகா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மகளுமான ஜோவிகா, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். ஜோவிகாவுக்கு அவருடைய தாய் வனிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், X/VIJAY TV

ஐஷூ

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கையும், நடனக் கலைஞருமான ஐஷூ, பிக்பாஸ் சீசன் 7-ல் களம் கண்டுள்ளார். திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அதற்கான களமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

விஷ்ணுவிஜய்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான விஷ்ணு, அந்த சீரியல் மூலம் பெரிய அடையாளத்தை பெற்றார். அந்த தொடருக்கு பின் பல பெண் ரசிகைகள் அவருக்கு உருவாகினர். பிறகு சில காலங்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த விஷ்ணு, நடிகர் விமல் மற்றும் அஞ்சலி நடித்த மாப்ள சிங்கம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலில் இவருடைய நடிப்புக்கும், உடன் சத்யா கேரக்டரில் நடித்துவரும் ஆயிஷாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரிக்குமே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

மாயா எஸ்.கிருஷ்ணா

மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O உட்பட பல படங்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணனுக்கு, கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிறகு தான் பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரம் படத்தின் ஒரு பிஜிஎம் மூலம் ஹிட்டடித்த இவர் தற்போது விஜயின் ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்டேண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவரான மாயா, பிக் பாஸில் என்னென்ன மாயங்கள் செய்யவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் சர்ச்சைகளையும் மாயாவே கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், X/VIJAY TV

சரவண விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்த சரவண விக்ரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் கண்டுள்ளார். பிக் பாஸ் மேடையில் சரவணனனுக்காக குமரன் மற்றும் தீபிகா கலந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் கடலைமிட்டாயை பரிசாக கொண்டு வந்திருந்தனர்.

அதை பார்த்ததும் சரவணன் அண்ணன் இது நம்ம கடையில் உள்ளதா? அப்படி என்றால் எக்ஸ்பைரி எல்லாம் பார்க்க வேண்டாம். தைரியமாக சாப்பிடலாம் என்று கிண்டல் செய்து இருந்தார். தற்போது இது குறித்தும் இந்த கண்ணனுக்கு எங்க போனாலும் நக்கல் ஜாஸ்தி தான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

யுகேந்திரன் வாசுதேவன்

பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியுள்ளார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், விஜய் நடித்த யூத் படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமா, தமிழ்நாடு என அனைத்திலிருந்தும் ஒதுங்கி நியூசிலாந்தில் செட்டிலான இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார்.

விசித்ரா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறி அசத்திய விசித்ராவும் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

பவா செல்லத்துரை

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் யாரை போட்டியாளராக அழைத்து வருவார்கள் என்றே தெரியாத அளவிற்கு புதிய துறையை சேர்ந்தவர்களை கூட சர்ப்ரைஸாக அழைத்துவருவார்கள். திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடன இயக்குநர்கள், இசைத் துறையை சேர்ந்தவர்கள் என பலதுறையினர் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தமிழ் சிறுகதை எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளார், பேச்சாளார், மற்றும் பதிப்பாசிரியர் என்று பன்முகத்திறமை கொண்டவரான பவா செல்லத்துரை இடம்பெற உள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு இலக்கியவாதி செல்வது இதுவே முதன்முறை.

பிக்பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், X/VIJAY TV

விஜய்

மாடலிங் துறையில் பணியாற்றிய விஜய் வர்மா பிக்பாஸ் சீசன் 7 போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது திரையுலகிற்கு நுழைய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், பிக்பாஸ் சீசன் -7 போட்டிக் களத்தில் அவர் இறங்கியுள்ளார்.

வைல்ட் கார்ட் மூலம் 2 பேர் நுழைய வாய்ப்பு

அடுத்ததாக வைல்ட்கார்ட் சுற்றில் அடுத்த இரு போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் வீட்டில் கோபம், சந்தோஷம், பிரச்சினை, அடிதடி, சண்டை, மனஸ்தாபம், காதல் என அனைத்தையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். கண்டண்டுக்காக காத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள், யுடியூப், ஃபேஸ்புக் வைத்திருப்பவர்கள், ரசிகர்கள் வரை உலகக்கோப்பை தொடருடன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, “அடேய் உலகக்கோப்பை – பிக்பாஸ் நீங்க 2 பேரு போதும் டா 2 மாசத்த சமாளிச்சிடுவோம்” என அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *