ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
”சிஏஏ சட்டத்துல ஏன் மதத்தை நுழைக்கிறீங்க?” – தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்?
‘சிஏஏ சட்டத்துல ஏன் மதத்தை நுழைக்கிறீங்க?’ தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்? – காணொளி
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமையன்று அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர், சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 2014-ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த தேதியை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த விண்ணப்பத்தைச் செய்யலாம்.
இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் 2019-ஆம் ஆண்டு நடைபெற்றன. இச்சட்டத்தை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். மற்ற மதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
நன்றி
Publisher: பிபிசிதமிழ்