நாகப்பட்டினம் சமூக பாதுகாப்புத் துறை வேலைக்கான புதிய அறிவிப்பை nagapattinam.nic.in இல் வெளியிட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் துறையில் உறுப்பினர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தரப்பட்டுள்ள கால அவகாசம் முடிவதற்குள் ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த வேலை வாய்ப்பிற்கான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
நாகப்பட்டினம் சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 35 வயது மற்றும் அதிகபட்சம் 65 வயதுடையவராக இருக்க வேண்டும்.
பணியிடம் :
சமூக பாதுகாப்புத் துறையில் உறுப்பினர் பதவியில் காணப்படும் பல்வேறு காலியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நாகப்பட்டினத்தில் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் :
அஞ்சல் வழி விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
ALSO READ : விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு
தேர்வு செய்யும் முறை :
Interview வைத்து தமிழக அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து மார்ச் 7, 2024 அன்று அல்லது அதற்குள் இயக்குநர், சமூகப் பாதுகாப்பு இயக்குநரகம், எண்.300, புரசைவாக்கம் உயர் சாலை, சென்னை – 600 010 என்ற முவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் வேலை வாய்ப்பு அறிவிப்பை பார்வையிட சமூக பாதுகாப்புத் துறையின் Official Notification லிங்கை கிளிக் செய்யவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in