இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் பாரதம் என்று மாற்றப்பட்டால், பாரதத்தை பா.ஜ.க என மாற்றிவிடுவார்களா என பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதம் பெயர் சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க-வை தாக்கிய கெஜ்ரிவால், “பெயர் மாற்றம் நடப்பதாக எனக்கு அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பல எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணியமைக்கப்பட்டு, அதற்கு இந்தியா என்று பெயர்வைக்கப்பட்டதற்காக, மத்திய அரசு நாட்டின் பெயரையே மாற்றுமா? இந்த நாடு 140 கோடி மக்களுக்குச் சொந்தமானது தவிர, ஒரு கட்சிக்கு மட்டுமல்ல. ஒருவேளை, எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணியை பாரதம் என்று பெயர் மாற்றினால், அவர்கள் பாரதத்தை பா.ஜ.க என்று மாற்றுவார்களா?” என்றார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com