ரயிலில் பயணிக்கும்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டீர்களா..? இதோ அதற்கும் வந்துவிட்டது சூப்பர் வழி..!!

ரயிலில் பயணிக்கும்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டீர்களா..? இதோ அதற்கும் வந்துவிட்டது சூப்பர் வழி..!!

பொதுவாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனென்றால், ரயிலில் அனைத்து வசதிகளும் இருப்பதால் அதை தான் தேர்ந்தெடுப்பார்கள். முக்கியமாக, பயண கட்டணமும் அதில் தான் குறைவாக இருக்கும். இந்த ரயில் போக்குவரத்து பயணத்தில் இறங்க வேண்டிய இடத்தை தவறவிடுவது வழக்கமாக நடப்பது தான். இந்த பிரச்சனைக்கு தீர்வாக தான் “டெஸ்டினேஷன் அலர்ட்” எனப்படும் ஒரு புதிய சேவையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையானது ரயில் பயணிகளுக்கு ஒரு அலாரம் போல செயல்படும். பயணிகள் இறங்கும் இடத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக இறங்க வேண்டிய ரயில் நிலையம் வரப்போகிறது என்பதை அறிவிக்கும் வகையில் அலாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலாரம் கேட்டவுடன் பயணிகள் தங்களது உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டு தயார் நிலையில் இருக்கலாம். குறிப்பாக, நாம் ரயிலில் ஏறும் முன்பே இந்த சேவையை ஆன் செய்ய வேண்டும்.

இந்த சேவையை பயன்படுத்தும் மெட்ரோ நகரங்களில் உள்ள மக்களுக்கு நிமிடத்திற்கு 1.20 ரூபாயும், மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள மக்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும், எஸ்எம்எஸ் வழியாக இந்த சேவையை நீங்கள் பெற நினைத்தால் ரூ.3 வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை நாம் இரண்டு முறைகளில் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

முறை 1

* 139 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கால் செய்து உங்களது மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

* ஸ்டார் (*) என்ற பட்டனை அழுத்தி உங்களது வாடிக்கையாளர் சேவை அதிகாரியுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

* பின்னர், உங்களது 10 இலக்க PNR நம்பரை என்டர் செய்ய வேண்டும்.

* இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை குறிப்பிட்டால், நீங்கள் இறங்கும் இடம் வரும் முன்பாக அலாரம் செட் செய்யப்படும்.

முறை 2

* இந்த முறையில் நாம் SMS வழியாக இந்த சேவையை பெறலாம்.

* ALERT என்று டைப் செய்து 139 என்ற எண்ணிற்கு மெசேஜை அனுப்ப வேண்டும்.

* சில நிமிடங்களிலேயே இந்த சேவை உங்களுக்கு ஆக்டிவ் ஆகிவிடும்.

* பின்னர், நீங்கள் இறங்க வேண்டிய இடம் வரும் முன்பு எந்த பதற்றமும் இல்லாமல் இறங்கலாம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *