இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான ஐ.டி விங் பக்கத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, “தேர்தல் சமயத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்ன?’ என்பது குறித்து, “ஆசிரியர்களை நம்பவைத்து ஏமாற்றும் இந்தக் குரல் யாருடையது?” என்று ஆடியோவைப் பதிவு செய்திருக்கின்றனர். மேலும் அதில், “மாதம் ரூ.10,000/- சம்பளம் வாங்கும் இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உரிமை வேண்டி நடத்திய போராட்டத்தை மறைக்க, மடைமாற்ற, அவர்களின் வலியை உணராமல், மாதம் ரூ.80,000/- சம்பளம் வாங்கும் முழுநேர ஆசிரியர்களின் போராட்டம் குறித்த ஒலிப்பதிவை எடுத்து வெளியிட்டு திசை திருப்ப நினைப்பது வெட்கக்கேடானது.
இவ்வாறு இந்தப் போராட்டத்தை திசை திருப்பாமல், நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 311, 181-ன் படி ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதையும் பணி நிரந்தரம் என்பதையும் விரைந்து நிறைவேற்றுக” என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவை முன்வைத்து தி.மு.க – அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com