நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதமும் எழுதியிருக்க, கடந்த ஒருவாரமாக இந்த சம்பவம் பேசுபொருளாக இருக்கிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மஹுவா மொய்த்ராவுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், பெண்ணாக தனது பாலினத்தை ஊழலுக்கு கவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மஹுவா மொய்த்ராவை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com