சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி, தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 3ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை மற்றும் பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தாண்டு புதுப்பித்தல் இணையதள முகவரியில் மாணவர் உள்ளீடு சென்று ஆதார் எண் நடித்த சுயவிவரத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது இடர்பாடுகள் ஏற்பட்டால் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை மாணவர்கள் அணுகலாம். எனவே, கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை இன்று அக்டோபர் 18 முதல் நவம்பர் 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com