வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக குழந்தைகள் அடம்பிடித்தால் அதனை வெளியே அழைத்து வந்து விளையாடி அதன்பின் தூங்க வைப்பார்கள். இன்னும் ஒரு சிலர் தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள். அனால், தற்பொழுதோ குழந்தைகள் சிறிய அளவில் அடம்பிடித்தாலும் அவர்களுடைய கையில் மொபைல் போனை கொடுத்து அவர்களை அமைதிப்படுத்தி விடுகின்றனர் அவர்களது பெற்றோர்.
இதுகுறித்து JAMA Pediatrics ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுப்பது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் முதல் 4மணி நேரம் வரை மொபைல் ஸ்கிரீனை பார்ப்பதால் அவர்களின் வளர்ச்சில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Also Read : இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை அதிரடி உயர்வு..! தமிழக அரசின் அரசாணை வெளியீடு!!
முதலில் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை குழந்தைகளோடு சிறிது நேரம் விளையாடுவது அவர்களுக்கும் உங்களுக்கும் நல்லது என்றும் தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in