தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உலக அளவில் பெருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவற்றின் முதற்கட்டமாக கடந்த இரு தினங்களுக்கு முன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்தே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றனர்.
Also Read : ஊழியர்களுக்கு சற்றுமுன் வந்த ஹாப்பி நியூஸ்..! அகவிலைப்படியை திடீரென உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்று பலருக்கும் கேள்வி இருந்து வந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று(சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in