இந்திய தொலைத் தொடர்பு துறை தற்போது காலியாக இருக்கின்ற பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்சமயம் engineer, junior wireless officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
இந்தியா முழுவதும், இந்த பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் masters degree, diploma in engineering போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது 64க்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அரசின் விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதோடு, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வரும் 11/9/2023 அன்று மாலைக்குள் கீழே உள்ள இணைப்பிற்குள் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification 2023
நன்றி
Publisher: 1newsnation.com