
மாநிலத்தின் வருவாயை பெருக்கும் வகையில் இந்தியாவில் தயார் செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை தமிழக அரசு மசோதாவில் ரூ.1000 வரை உயர்த்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தற்போது தமிழகத்தில் மதுபான கடைகள் சார்பாக நமது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500 மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானங்களின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் தமிழகத்திற்கு மதுபான கடைகள் மூலம் வரும் வருவாயை பெருக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
Also Read >> நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! சரியும் தங்கம் விலை! நகை வாங்க இது தான் சரியான நேரம்…
அதோடு, இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை சாதாரண வகைகளுக்கு லிட்டருக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை உயர்த்தப்படும் என்றும், நடுத்தர வகைகளுக்கு லிட்டருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை உயர்த்தப்படும் என்றும், உயர்தர வகைகளுக்கு லிட்டருக்கு ரூ.500 லிருந்து ரூ.1000 வரை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு மதுபானங்களின் விலையை உயர்த்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in