என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்” என்றார்.
இதுதொடர்பாக பேசிய டிஎஸ்பி சரவணன், “எம்.எல்.ஏ. பண்ணாரியை அவமதிக்கும் வகையில் நான் நடந்துகொள்ளவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக விவசாயிகள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களை அனுப்பிவிட்டு எம்எல்ஏ பண்ணாரியை உள்ளே அழைத்தேன். விவசாயிகளிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியதால் சோர்வாக இருந்தது. அதனால், டீ குடித்து விட்டு அழைப்பதாக அவரிடம் கூறினேன். அவரையும் டீ குடிக்க கூறினேன். ஆனால், அவர்தான் தானாகவே வெளியில் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து வந்து கோயில் பிரச்னை தொடர்பாக என்னிடம் பேசினார். அவரது கோரிக்கையை என்னால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. அந்த கோபத்தில்தான் இவ்வாறு பேசுகிறார்” என்றார்.
இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் பேசுகையில், “எம்எல்ஏ பண்ணாரியை டிஎஸ்பி அவமதித்ததாக கூறப்படுவது குறித்து தனக்கு எந்தப் புகாரும் வரவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com