டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் அனுப்பிய நாள்முதலே, நவம்பர் 2-ம் தேதி விசாரணை முடிந்ததும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவார், மொத்த கட்சியையும் பா.ஜ.க சிறையிலடைக்க விரும்புகிறது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வந்தது. இத்தகைய பேச்சுக்களால், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று பலத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க, இன்று காலை 11 மணியளவில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராவார் என்று கூறப்பட்ட நிலையில், சம்மன் சட்டவிரோதமானது என்று கூறி அதனைத் திரும்பப் பெறுமாறு அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், “இந்த சம்மன் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக பா.ஜ.க-வின் உத்தரவின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, அமலாக்கத்துறை உடனடியாக சம்மனை திரும்பப் பெற வேண்டும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விமர்சித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, “அரவிந்த் கெஜ்ரிவாலின் கூற்றில் எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரஸ் கூட அரவிந்த் கெஜ்ரிவால் அரசை ஊழல் அரசு என்று குற்றம்சாட்டியிருக்கிறது. அதனால், அவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களா?” எனக் கேள்வியெழுப்பினார்.
எவ்வாறாக இருப்பினும் இன்றைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது. காரணம், மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் சிங்ராலி பகுதியில் ஆம் ஆத்மி நடத்தும் பேரணியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் அரவிந்த கெஜ்ரிவால் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com