நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், கூட்டணியிலிருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அ.தி.மு.க-வையும், பா.ஜ.க-வையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.


நாலரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அ.தி.மு.க-வில் வைத்துக் கொண்டு நான்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்கு அளித்தபோதும் ஆட்சி நிலைத்து நின்றது, எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போல அ.தி.மு.க-வுடன் நிறைய கட்சிகள் வர உள்ளன, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com