ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். உள்கட்டமைப்பு நமக்கு தேவைப்படுகிறது. கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்களை, இரண்டரை கோடி தொண்டர்களாக மாற்றுவோம்” என்றார்.


இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால், அவர்களுக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மக்களுக்கும் பயன் கிடையாது. பத்து ஆண்டு காலம் இந்தியாவை வலிமையாக மாற்றியுள்ள பிரதமர் மோடிக்கு ஆதரவு தருவதுதான் எங்களின் நிலைப்பாடு.
கழகத்தின் சட்ட விதிகள் காற்றில் பறந்துள்ளன. ஜனவரி 19-ஆம் தேதி வரும் நீதிமன்றத் தீர்ப்பு முக்கியமானதாக இருக்கும். அதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு முடிவு வரும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் முக்கியமானதாக கருதுகிறோம். நானும், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com