இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் சபாநாயகர் தனது தீர்ப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, சபாநாயகர் தனது இந்த விவகாரத்தில் தனது முடிவைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அளித்தப் பேட்டியில், “சிவசேனாவின் 1999-வது சட்டப்பிரிவின்கீழ் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா எம்.எல்.ஏ-க்களின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா. கட்சி சார்பாக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதற்காக, எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க முடியாது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி நியமித்த பரத் கோகாவாலாதான் உண்மையான சிவசேனா கொறடாவாகும்” என்றார்.
சபாநாயகரின் இத்தகைய முடிவு, ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. எனவே, இது தாக்கரே தரப்புக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com