உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மூதாட்டி ஒருவர் தனது மகனின் சடலத்தை, தனது இளைய மகனுடன் 4 சக்கர தள்ளு வண்டியில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக மீரட் நகர் காவல்துறை அதிகாரி, “உயிரிழந்த நபரின் பெயர் ராஜு. எட்டவா மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் குடும்பம், கூலி வேலை தேடுவதற்காக மீரட்டுக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில், ராஜு நீண்ட நேரம் வீட்டுக்கு வரவில்லை என்பதால் அவரது தாயாரும், அவரது தம்பியும் இவரைத் தேடி வந்திருக்கிறார்கள். அப்போதுதான் ராஜு ஒரு மதுக்கடை வாசலில் உயிரிழந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், ராஜுவின் சடலத்தை எடுத்துச் செல்லவும், அவரது இறுதிச் சடங்கு செய்வதற்கும் மூதாட்டியிடம் பணம் இல்லை என்பதால், எப்படியாவது தனது கிராமத்துக்கு உடலை எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.
அதற்காகத் தனது இளைய மகனுடன், சாலையோரம் இருந்த தள்ளு வண்டியில் உடலை எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும், செல்லும் வழியில், அவரது இறுதிச் சடங்குகளை நடத்த மக்களிடம் உதவியும் கேட்டிருக்கிறார். அப்போதுதான் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார். மூதாட்டிக்கு எந்த உதவியும் கிடைக்காததால், மனமுடைந்த அவர், அருகிலிருந்த காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமித் குமார் மாலிக், அவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டி இறந்தவரின் இறுதிச் சடங்குகளை நடத்த உதவினார்” எனத் தெரிவித்தார்.
In Meerut, UP, an elderly mother kept roaming around carrying the dead body of her young son on a cart. She was asking people for money for the last rites but no one helped. Outpost In-charge Amit Malik helped the elderly mother and performed the last rites. pic.twitter.com/vf2fjnYGh8
— iMayankofficial (@imayankindian) September 6, 2023
இந்த நிலையில், மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் அகிலேஷ் மோகன், “எங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், அமரர் வாகனங்கள் உள்ளன, இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனம் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இறந்தவர்களைத் தகனக் கூடத்திற்குக் கொண்டு செல்ல ஏன் அமரர் வாகனம் கிடைக்கவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன், அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நகர்வுகள் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com